தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

 

தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

பா.ஜ.க.வின் முன்னாள் நட்பு கட்சியான சிவ சேனா தற்போது பா.ஜ.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், அடுத்த மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற பா.ஜ.க. விரும்புகிறது என சிவ சேனா குற்றம் சாட்டியுள்ளது.

தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

சிவ சேனாவின் ஊது குழலான சாமனா பத்திரிகையில், ராஜஸ்தானில் அரசை காப்பாற்றுவதில் காங்கிரஸ் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது. அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையன்று தொடங்க உள்ளது, முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கத்தை நடத்துவதற்கு தெளிவான ஆணை உள்ளது. பா.ஜ.க.வின் எண்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் பார்த்து அனைவரும் சிரிக்கிறார்கள். அவர்களின் கொள்கை சிம்பிள்தானது, தங்களது சிந்தனைக்கு உடன்படாத அரசாங்களை செயல்பட விடமாட்டார்கள் மற்றும் அந்த அரசாங்களை கவிழ்த்து விடுவார்கள்.எம்.எல்.ஏ.க்களை எண்ணிக்கையை அதிகரிக்க முடியாததால் சச்சின் பைலட்டின் கிளர்ச்சி வெற்றிபெறவில்லை, அசோக் கெலாட்டின் சக்ரவ்யு காரணமாக பா.ஜ.க.வால் முடியவில்லை.

தனது சிந்தனைகளுக்கு ஒத்து வராத அரசாங்களை கலைப்பதே பா.ஜ.க.வின் கொள்கை… சிவ சேனா தாக்கு..

செப்டம்பருக்குள் மகாராஷ்டிரா அரசை கவிழ்க்க போவதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறினர். அரசாங்கத்தில் தோல்வியுற்ற பிறகு, மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை வெளியேற்ற இந்த கொள்கை என்ன? மகாராஷ்டிரா அரசாங்கத்தை ஸ்திரமின்மை மற்றும் அகற்றுவதற்கான முயற்சியை அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். ஜார்க்கண்டில் அரசாங்கத்தை அகற்றவும் பா.ஜ.க. விரும்புகிறது. எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநில அரசாங்களுக்கு மத்திய அரசின் ஆதரவும், உதவியும் இல்லை. ஆப்ரேஷன் தாமரை ராஜஸ்தானில் வெற்றிபெறவில்லை. மகாராஷ்டிராவில் ஆப்ரேஷன் தோல்வி கண்டது. தற்போது போலி டாக்டர்கள் செப்டம்பர் மாதத்தில் அறுவை சிகிச்சைக்கு புதிய தேதியை நிர்ணயம் செய்துள்ளனர். ராஜஸ்தானில் ஒரு மாதமாக ஆப்ரேஷன் தாமரை நடந்தபோதிலும் தோல்வியுற்றது. அதிலிருந்து பா.ஜ.க. ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.