எல்லாம வதந்திங்க.. அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவே இல்லை.. சஞ்சய் ரவுத் தகவல்

எல்லாம வதந்திங்க.. அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவே இல்லை.. சஞ்சய் ரவுத் தகவல்

அகமதாபாத்தில் அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவில்லை என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை நீக்கிவிட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அகமதாபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசியதாக ஒரு செய்தி வெளியானது.

எல்லாம வதந்திங்க.. அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவே இல்லை.. சஞ்சய் ரவுத் தகவல்
சரத் பவார்

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமித் ஷா எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த முடியாது என்று பதில் அளித்தார். இதனால் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஆனால் அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவில்லை என்று சிவ சேனா கூறுகிறது.

எல்லாம வதந்திங்க.. அமித் ஷாவை சரத் பவார் சந்திக்கவே இல்லை.. சஞ்சய் ரவுத் தகவல்
அமித் ஷா

சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் இது குறித்து கூறுகையில், சில விஷயங்கள் காலத்துடன் தெளிவாக விளக்க வேண்டும். இல்லையென்றால் அது குழப்பத்தை உருவாக்கும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே எந்தவொரு ரகசிய சந்திப்பு நடைபெறவில்லை என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும். இப்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிகளுக்கு வைக்கவும் என்று தெரிவித்தார்.