பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியுள்ளது.

கடந்த 28 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி, உமா பாரதி உள்பட 32 பேரையும் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது. இந்த தீர்ப்பை சிவ சேனா வரவேற்றுள்ளது. அதேசமயம் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..
சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை கட்சியும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இருவரும் வரவேற்றுள்ளனர். ராமர் கோயில் இப்போது கட்டப்பட்டு வருவதால் இந்த சம்பவத்தை நாம் மறந்து விடக்கூடாது. பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால் நாம் ராமர் கோயில் கட்டப்படுவதை நாம் பார்த்திருக்க மாட்டோம் என தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..
ரன்தீப சிங் சுர்ஜேவாலா

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் செய்திதொடர்பாளர் கூறுகையில், கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் சட்டத்தின்படி தெளிவான சட்டவிரோதம் மற்றும் மிக மோசமான மீறல் என்று தீர்ப்பளித்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே எந்தவொரு பாகுபாடும் இன்றி மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசுகளை காங்கிரஸ் வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.