மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலைத் தடுத்திடுங்கள்! – நிபுணர்கள் எச்சரிக்கை

 

மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலைத் தடுத்திடுங்கள்! – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம், பொது சுகாதாரம், சமூக இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் புறக்கணித்ததின் விளைவு புது புது வீரியம் மிக்க கொரோனா வந்து அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. மீண்டும் முழு ஊரடங்கை நோக்கி நாடு நகர்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், மக்கள் மத்தியில் கொரோனா அச்சம் துளியும் இல்லை. மாஸ்க் அணிபவர்கள் எண்ணிக்கையே அதற்கு சாட்சியாக உள்ளது.

மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலைத் தடுத்திடுங்கள்! – நிபுணர்கள் எச்சரிக்கை

இந்த நிலையில் என்னதான் அதிவேகமாகப் பரவும் மாறுபாடு அடைந்த கொரோனா வந்தாலும் அதை நம்முடைய மாஸ்க் எளிதில் தடுத்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சாதாரண மாஸ்க் அணிவதால் எந்த பயனும் இல்லை, மூன்று லேயர் மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஒருவரின் எச்சில் திவலை, தும்மலின் நீர்த்திவலை வழியாக காற்றில் கலக்கிறது. கொரோனாத் தொற்று இல்லாதவர் அதை சுவாசிக்கும் போது அவருக்கு கொரோனா பரவுகிறது. இந்த சூழலில் கொரோனா தொற்று உள்ளவர், தொற்று இல்லாதவர் என அனைவரும் முகக் கவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கலாம். மூன்று அடுக்கு முறையில் உருவாக்கப்பட்ட முகக் கவசத்தில் கொரோனாவை வடிகட்டும் திறன் அதிக அளவில் உள்ளது. எனவே, மூன்று லேயர் மாஸ்க் அணிவது கொரோனா பரவலைத் தடுக்க உதவும் என்று பரிந்துரைக்கிறோம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சையின்சஸ் , அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் நிபுணர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் மூன்று லேயர் மாஸ்க் அணிவது கொரோனா பரவலை மிகப்பெரிய அளவில் தடுத்து நிறுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.

மிக வேகமாக இருமினாலும் கூட அது முதல் மற்றும் இரண்டாவது லேயர் வழியாக கடந்தாலும் மூன்றாவது லேயரில் தடுத்து நிறுத்தப்படும். இதனால் சிறு துளி கூட வெளியேறாது. அப்படியே வெளியே வந்தாலும் அதனால் மூன்று லேயரைக் கடந்து வேறு ஒருவரின் சுவாச மண்டலத்தை அடைய முடியாது.

நாடு முழுக்க கொரோனா பரவல் மீண்டும் வேகம் பிடிக்கும் நிலையில் மக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனா பரவலைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே லாக்டவுன் என்ற மிகப்பெரிய பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்!