என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

 

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில், ‘’ அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’’என்று சொன்ன காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் ஆடியோ விவகாரத்தில், அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆடியோ விவகாரத்தினால் அண்ணாமலை ராஜினிமாமா செய்கிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கும் சூழலில் அவர் இந்த ஆதரவினை தெரிவித்திருக்கிறார்.

தமிழக பாஜகவின் பாலியல் அத்துமீறல்கள் அதிகம் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் அக்கட்சியில் 30 ஆண்டுகளாக இருந்து வரும் மூத்த நிர்வாகியின் ஆபாச வீடியோ வெளிவந்ததால் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி.ராகவனின் அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் தமிழக பாஜக பிரமுகர் தான். அந்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கொடுத்து நடவடிக்கை எடுங்கள். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்டதாகவும், அதற்கு அண்ணாமலை, எனக்கும் பெண் குழந்தை இருக்கிறது . பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் . அதனால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுங்கள். அப்படியாவது ஒரு நியாயம் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று சொன்னதாகவும், அதன் அடிப்படையில்தான் தான் அந்த வீடியோவை வெளியிட்டதாகவும் சொல்லியிருக்கிறார் மதன் ரவிச்சந்திரன்.

நாலு சுவற்றுக்குள் வைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தலைவர் வீடியோ வெளியிட்டு நாலாபக்கமும் தெரியும்படி செய்துவிட்டார் என்கிறார் மதன்.

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்த வீடியோவிற்கு பிறகு கே.டி. ராகவன் தானாகவே முன்வந்து தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். என்னிடம் கேட்டுவிட்டு நான் சொல்லித்தான் அந்த வீடியோவை வெளியிட சொன்னதாக சொல்வது சுத்த பொய் என்று அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இதன் பின்னர் அண்ணாமலை சொல்லித்தான் அந்த வீடியோவை வெளியிட்டேன் என்று உண்ணாமலை பேசிய ஆடியோக்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார் மதன் ரவிச்சந்திரன். அந்த ஆடியோவை வெளியிட்ட மதன், அண்ணாமலை சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தலைமை பொறுப்பு வகிக்குமளவுக்கு பொறுப்பு இல்லை. பெண்கள் விஷயத்திலும் பாதுகாப்பு விஷயத்திலும் அவருக்கு அக்கறை இல்லை.

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

கட்சியில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்திற்கு வரும்போது அவரது பார்வையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார் மதன் ரவிச்சந்திரன். ”நான் பாஜக தலைவர் ஆன பின்னர் முதல்வேலையாக இந்த தலைவர் அறையில் இருக்கும் கதவுகளை, மாத்தினேன். ஏன் என்றால் இந்த அறையில் அப்படி பல வேலை நடந்திருக்கிறது. குஷ்பு, காயத்ரி ரகுராம் இப்படி யார் வந்தாலும் கூட ஆள் இல்லாம நான் தனியா பேசுவதே இல்லை”என்ற அண்ணாமலையின் ஆடியோவினையும் வெளியிட்டிருந்தார்.

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

மேலும் பாஜகவில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. ஆனால் தன்னிடம் நேரில் பாஜகவில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் இருக்கின்றன. கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை ஒப்புக் கொண்டதை ஆடியோ பதிவு இருப்பதாகச் சொல்லி அதையும் வெளியிட்டார் மதன் ரவிச்சந்திரன். அண்ணாமலையின் ஆடியோ வெளியாகி அவரை சிக்க வைத்திருக்கும் நிலையில், இதனால் அவரின் பதவிக்கு பங்கம் வந்துவிடுமோ என்று பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மற்றும் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார் – ஆடியோவால் சிக்கிய அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் ஆதரவு

அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ விளக்கத்தில், ‘’எங்களோட பாஜக தலைவர் அண்ணாமலை ஜி இதுவரைக்கும் எல்லா பெண்களுக்கும் மரியாதை கொடுத்து பாதுகாப்பு கொடுத்து தான் சொந்த சகோதரி மாதிரியாகத்தான் பார்த்து இருக்கிறாரே தவிர மற்றபடி அவரைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவர் எல்லா பெண்களையும் அக்கா, தங்கை சிஸ்டர் என்று சொல்லித்தான் அழைப்பார். என்னை அவர் சொந்த சகோதரியாகவே நினைத்தார். அவரைப்பற்றிய ஒரு ஆடியோ வந்தது. அதில் அவரை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே செய்யும் சூழ்ச்சிகள் தெரிகிறது. அவர் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்தான் கவனமாக இருப்பார் மரியாதை கொடுப்பார். என்னுடைய ஆதரவு அண்ணாமலை ஜி’க்கு கண்டிப்பாக இருக்கும்’’என்று தெரிவித்திருக்கிறார்.