செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. மன்னிக்க முடியாது.. சசி தரூர்

செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. மன்னிக்க முடியாது.. சசி தரூர்

சட்டவிரோதத்தை மன்னிக்க முடியாது, செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்தார்.

டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அமைதியான வழியில் போராடி வந்த விவசாயிகள் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் இன்று டெல்லிக்குள் நுழைந்தனர். அதனை தொடர்ந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர். சில போராட்டக்காரர்கள் அங்குள்ள கொடிக்கம்பத்தில் தங்களது விவசாய சங்க கொடியை ஏற்றினர்.

செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. மன்னிக்க முடியாது.. சசி தரூர்
சசி தரூர்

டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கொடி மட்டுமே பறக்க வேண்டிய செங்கோட்டையில் விவசாயிகள் தங்களது கொடியை ஏற்றியதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், விவசாயிகள் தங்களது கொடி ஏற்றியதை சட்ட விரோதமானது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் விவசாயிகளின் கொடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. மன்னிக்க முடியாது.. சசி தரூர்
செங்கோட்டையை முற்றுகையிட்ட போராட்ட விவசாயிகள்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் டிவிட்டரில், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விவசாயிகளின் போராட்டங்களை ஆரம்பத்தில் இருந்தே நான் ஆதரித்தேன். ஆனால் சட்டவிரோதத்தை என்னால் மன்னிக்க முடியாது. குடியரசு தினத்தில் புனிதமான தேசிய கொடி செங்கோட்டைக்கு மேலே பறக்க வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.