கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள்.. சரத் பவார்

கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள்.. சரத் பவார்

கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கூடி, கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 3 மற்றும் 5ம் தேதிகளை தேர்வு செய்தது. இந்த சூழ்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள் என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள்.. சரத் பவார்

செய்தியாளர்கள் சந்திப்பின்போது சரத் பவார் கூறியதாவது: கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி யுத்தம் செய்வது என்று நாம் அனைவரும் சிந்தித்து கொண்டு இருக்கிறோம். ஆனால் கோயில் கட்டுவதால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி விடலாம் என சில மக்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை எப்படி முன்னேற்ற வேண்டும் என்பதை பார்ப்பதில்தான் நமது முன்னுரிமை இருக்க வேண்டும்.

கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள்.. சரத் பவார்

லாக்டவுன் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது, இந்த விஷயத்தில் கவனம் செலுத்துமாறு என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நாம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்க இருப்பதை மனதில் வைத்துதான், கோயில் கட்டினால் கொரோனா வைரஸை ஒழித்து விடலாம் என சில மக்கள் நினைக்கிறார்கள் சரத் பவார் பேசியதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. சரத் பவார் பேச்சி மகாராஷ்டிரா கூட்டணிக்குள் புதிய பஞ்சாயத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் சிவ சேனா உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.