நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி அரசு.. சரத் பவார்

நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி அரசு.. சரத் பவார்

நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று சரத் பவார் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகளவில் சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சரத் பவார் பதிலளிக்கையில் கூறியதாவது: அமலாக்கத்துறை தற்போதைய நாட்களில் பயன்படுத்துவது போல் இதற்கு முன் பயன்படுத்தியது இல்லை.

நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி அரசு.. சரத் பவார்
அமலாக்கத்துறை

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அரசாங்கம் (மத்திய அரசு) இந்த நிறுவனத்தை (அமலாக்கத்துறை) பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. அமலாக்கத்துறை ரெய்டுகள் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சில தென்னிந்திய மாநிலங்களிலும் நடக்கிறது. கோவிட்-19ஐ கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க அமலாக்கத்துறையை பயன்படுத்தும் மோடி அரசு.. சரத் பவார்
பா.ஜ.க.

முதல்வரும், மாநில அரசும் அதை செய்கின்றன. ஜனநாயகத்தில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்ட. ஆனால் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவர்களின் கட்சி (பா.ஜ.க.) தொண்டர்களும் அதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.