சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட இருக்கும் முதல் பெண் ஷப்னம்… பாசத்தை மறைத்து வெறியை ஏற்படுத்திய காதல்

 

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட இருக்கும் முதல் பெண் ஷப்னம்… பாசத்தை மறைத்து வெறியை ஏற்படுத்திய காதல்

மதுரா சிறையில் ஷப்னம் என்ற பெண் கைதி தூக்கலிடப்பட உள்ளார். அந்த பெண் கைதிதான் சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் நகரத்தை ஒட்டியுள்ள கிராமம் பவன்கேடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் அந்த பகுதியை சலீம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை ஷப்னம் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த ஷப்னம் 2008 ஏப்ரல் 14-15 நள்ளிரவில் தனது காதலுக்கு தடையாக இருந்த தாய், தந்தை, 2 சகோதரர்கள், சகோதரி, மைத்துனர் ஆகியோரை தனது காதலன் சலீம் உதவியுடன் கோடாரியால் வெட்டி கொன்றார். மேலும் மருமகனை கழுத்தை நெரித்து கொன்றார்.

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட இருக்கும் முதல் பெண் ஷப்னம்… பாசத்தை மறைத்து வெறியை ஏற்படுத்திய காதல்
தூக்கு மேடை

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தையே உலுக்கியது. இந்த கொலைகள் தொடர்பாக ஷப்னம் மற்றும் சலீம் மீது வழக்கு தொடரப்பட்டது. மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் அவர்கள் (ஷப்னம், சலீம்) இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஷப்னமும், சலீமும் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து அவர்கள் இருவரும் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் அதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார். தற்போது அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து தப்பிதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டது. இதனையடுத்து மதுரா சிறை நிர்வாகம் ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்பட இருக்கும் முதல் பெண் ஷப்னம்… பாசத்தை மறைத்து வெறியை ஏற்படுத்திய காதல்
மதுரா சிறை

பெண் குற்றவாளிகளை தூக்கிலிடும் வசதி மதுரா சிறையில் மட்டுமே உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1870ம் ஆண்டு மதுரா சிறை கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையிலான காலத்தில் ஒரு பெண் குற்றவாளிக்கு கூட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இல்லை. சுதந்திர இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள முதல் பெண் குற்றவாளி ஷப்னம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷப்னம் பரேலி சிறையிலும், சலீம் ஆக்ரா சிறையிலும் உள்ளனர். மதுரா சிறை நிர்வாகம் இவர்களது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய உத்தரவை எதிர்நோக்கி உள்ளனர். நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தவுடன் அவர்கள் இருவரும் தூக்கிலிடப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.