கொரானாவால் படுத்த பாலியல் தொழில் -கொரானாவை விரட்ட மாஸ்க் தயாரிக்கும் பாலியல் பெண்கள் .

 

கொரானாவால் படுத்த பாலியல் தொழில் -கொரானாவை விரட்ட மாஸ்க் தயாரிக்கும் பாலியல் பெண்கள் .

கொரானாவால் மற்ற எல்லா தொழில்களை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட தொழில் எதுவென்றால் அது பாலியல் தொழில்தான். எய்ட்ஸ்க்கு கூட பயப்படாமல் வந்த வாடிக்கையாளர்கள் கொரானாவுக்கு பயந்து வருவதே இல்லை என்று பல பாலியல் பெண்கள் வேறு தொழில் பார்க்க போய் விட்டார்கள், இன்னும் பல பெண்கள் வீடியோ கால் மூலம் தொழிலை செய்கிறார்கள்.இருந்தாலும் அதில் போதிய வருமானமில்லையாம்.

கொரானாவால் படுத்த பாலியல் தொழில் -கொரானாவை விரட்ட மாஸ்க் தயாரிக்கும் பாலியல் பெண்கள் .

டெல்லியில் ஜிபி சாலையில் 22 கட்டிடங்கள் உள்ளன, இந்த கட்டிடங்களில் மொத்தம் 84 அறைகளைக் கொண்டுள்ளன .இங்குள்ள ஒவ்வொரு அறையிலும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்கள் வீதம் மொத்தம் 750 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இதுபோன்ற பல பாலியல் தொழிலாளர்கள் தங்கள் விபச்சார விடுதிகளில் இப்போது முககவசங்களை உருவாக்கும் வேலைகளை செய்கிறார்கள், இதனால் அவர்கள் பயனடைந்து சம்பாதிக்க முடிவதாக கூறுகிறார்கள் . மேலும் இவர்களை போல மும்பையிலுள்ள பல பாலியல் தொழிலாளர்களும் இப்படி முககவசங்களை தயாரிக்க கற்றுக்கொண்டு சமபாதிக்க தொடங்கியுள்ளனர் .தங்கள் தொழிலை கெடுத்த கொரானாவை விரட்ட முகக்கவசம் தயாரித்து விரட்ட அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றால் அது மிகையாகாது