இரவில் வந்த பைக்குள்… தப்பிய ஒருவர்… சிக்கிய 4 பேர்!- விசாரணையில் அதிர்ந்த போலீஸ்

 

இரவில் வந்த பைக்குள்… தப்பிய ஒருவர்… சிக்கிய 4 பேர்!- விசாரணையில் அதிர்ந்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து வழிப்பறி செய்து வந்த இளம்பெண் உள்பட 4 பேர் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரவில் வந்த பைக்குள்… தப்பிய ஒருவர்… சிக்கிய 4 பேர்!- விசாரணையில் அதிர்ந்த போலீஸ்

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த இளம்பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட 4 பேரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததையடுத்து காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட 4 பேரும் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் (23), சூர்யா (20), லியோஜான் (18), மற்றும் அவரது மனைவி பிரியா( 20) என்பது தெரியவந்தது. இவர்கள் வேப்பம்பட்டு பகுதியில் பெட்ரோல் பல்க் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த ஹரிதாஸ் (50) என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு சவரன் மோதிரம், செல்போன், 18,000 ரூபாய் பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தது தெரிய வந்தது.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் வெள்ளவேடு பகுதியில் கிருஷ்ணகிரியிலிருந்து லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஊத்தங்கரையை்ச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரிடம் தொலைபேசி மற்றும் 2,500 ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றனர்.

இரவில் வந்த பைக்குள்… தப்பிய ஒருவர்… சிக்கிய 4 பேர்!- விசாரணையில் அதிர்ந்த போலீஸ்

இதேபோல் மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் கிராமத்தில் பாக்கு மட்டை தயாரிக்கும் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தொலைபேசி 8,500 ரூபாய் பணம் மற்றும் ஸ்பிளெண்டர், டி.வி.எஸ். ஸ்கூட்டி என இரு பைக்குகளையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணவாளநகர், வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்தனர். செவ்வாப்பேட்டை காவல்துறையினர் 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து யுனிகார்ன், ஸ்பிளெண்டர், டி.வி.எஸ். ஸ்கூட்டி, 12, 000 ரூபாய் மதிப்புள்ள மூன்று செல்போன் மற்றும் 8,000 ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இளம்பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகி்னறனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருவதாகவும் செவ்வாப்பேட்டை காவல்துறையினர் தெரிவித்தனர்.