செப்.5, போற்றத்தக்க ஆசிரியர்களுக்கு புகழுரைக்கும் ஆசிரியர் தினம்

 

செப்.5, போற்றத்தக்க ஆசிரியர்களுக்கு புகழுரைக்கும் ஆசிரியர் தினம்

கல்விச் சூழல் புதிய புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வரும் காலத்தில் ஆசிரியர் தின அனுசரிப்பு கூடுதல் கவனம் பெற்றதாக இருக்கிறது.
ஆசிரியர் தினத்தில், சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்வதுடன், அவரது கருத்துகளை பகிர்ந்து கொண்டு அவருக்கு பெருமை சேர்த்து வருகிறோம்.

செப்.5, போற்றத்தக்க ஆசிரியர்களுக்கு புகழுரைக்கும் ஆசிரியர் தினம்
செப்.5, போற்றத்தக்க ஆசிரியர்களுக்கு புகழுரைக்கும் ஆசிரியர் தினம்


ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டியதால்தான் அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமான கொண்டாடி வருகிறோம்.
அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக, 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில், ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களும் போற்றத்தக்கவர்கள் என்பதற்கான நாள்தான் ஆசிரியர்தினம். ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, ஆற்றலுடன், சமூகத்துக்கு சிறந்த பங்களிப்பை செய்ய காத்திருக்கும் மாணவர்களும் ஆசிரியர் தினத்தை அனுசரிப்பதே ஆசிரியர்களுக்கு அளிக்கும் மரியாதையாக இருக்கும்.
அ.ஷாலினி