அமித்ஷா ’பெரிய சங்கி’ என்றால் அண்ணாமலை ’சின்ன சங்கி’

 

அமித்ஷா ’பெரிய சங்கி’ என்றால் அண்ணாமலை ’சின்ன சங்கி’

அமித்ஷா எனும் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா ’பெரிய சங்கி’ என்றால் அண்ணாமலை ’சின்ன சங்கி’

பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு திருப்பூரில் சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல், ”அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை. பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களை திராவிட கும்பலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அதற்கு அண்ணாமலை முதலமைச்சராகும். திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்” எனக் கூறினார்.

அதன்பின் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சி பாஜக. இத்தனை காலமாக பாஜகவிற்கு தமிழகம் தேவைப்பட்டது. இப்போது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது” எனக் கூறினார்.