முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

ஸ்டாலினும் எடப்பாடியும் இப்போது வேண்டுமானால் அடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன் பல சீனியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு ஜோடி தான் செந்தில் பாலாஜி-எம்ஆர் விஜயபாஸ்கர். இருவரும் சண்டை செய்வதில் சளைத்தவர்கள் இல்லை. இதனால் கரூர் தேர்தல் களத்தில் கொஞ்சம் அதிகமாகவே அனல் பறக்கிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதே இங்குள்ள பிரதான பிரச்சினைக்குக் காரணம்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

எம்ஆர் விஜயபாஸ்கர் இப்போது அமைச்சராக இருந்தாலும் அரசியலில் செந்தில் பாலாஜி சீனியர். அவருக்கு முன்பே கவுன்சிலர், மாவட்டச் செயலாளர், இரு முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் என கரூர் தளபதியாக வலம் வந்தவர் செந்தில் பாலாஜி. விஜயபாஸ்கரோ சென்ற தேர்தலில் வெற்றிபெற்று சீனியர் தம்பிதுரையின் அழுத்ததால் அமைச்சரானவர். செந்தில் பாலாஜி தனக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதால் தலைமையிடம் கொளுத்தி போட்டு அமைச்சர் பதவியைப் பறிக்க வைத்தார்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

கூடவே இன்னொரு வேலையும் சிறப்பாகச் செய்தார். கரூரில் அப்போது வளர்ந்து வந்த விஜயபாஸ்கரை கொம்புசீவி விட்டு செந்தில் பாலாஜிக்கு எதிராகத் திருப்பினார். விஜயபாஸ்கரும் ஆமாம் சாமி போட எம்எல்ஏ சீட்டும் அமைச்சர் இலாகாவும் தேடி வந்தது. இப்போதும் கூட தம்பிதுரையைப் பார்த்தால் குழைந்துவிடுவார் விஜயபாஸ்கர். நன்றி உணர்வாம்… தம்பிதுரை வெற்றிகரமாக செந்தில் பாலாஜியை வீழ்த்தினார். அவரின் ஆஸ்தான தொகுதியான கரூரில் போட்டியிட்டவர் விஜயபாஸ்கர்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

இப்படி அதிமுகவில் இருந்தபோதே கீரியும் பாம்புமாக இருந்த இந்த ஜோடி, இப்போதைய தேர்தலில் அதிகாரப்பூர்வ எதிராளிகளாக மாறியிருக்கிறார்கள். சொல்லவா வேண்டும்… நினைத்தை விடவே கரூர் ரத்தக்களரியாகி இருக்கிறது. நீ முந்துவதா, நான் முந்துவதா என போட்டிப் போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்கின்றனர். முன்பே சொன்னது போல சீனியரான செந்தில் பாலாஜி களப்பணிக்குப் பெயர் போனவர். ஒரு மாவட்டத்தை ஒப்படைத்துவிட்டால் போதும் டாப் டூ பாட்டம் சிறப்பான செய்கையைச் செய்வார்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

மக்களின் பல்ஸை நன்கு அறிந்தவர். அதனால் தான் மாட்டு வண்டிக்காரர்கள் மணல் அள்ள தடை விலக்கப்படும் என்று பகீரங்கமாக வாக்குறுதி கொடுத்தார். அது கள எதார்த்தம் தெரியாத கமல் போன்றவர்களுக்கு வேண்டுமானால் பிரச்சினைகளாகத் தெரியலாம், உண்மையில் வாக்குகளைக் கவர்வதற்கான பிரச்சார யுத்தி தான் செந்தில் பாலாஜியின் அறிவிப்பு. இது தென் மாவட்டங்கள் முழுவதும் எதிரொலித்திருக்கும் என்பது திமுகவுக்கு கூடுதல் பிளஸ். செந்தில் பாலாஜி இதைச் சொன்ன பிறகு விஜயபாஸ்கரும் பதறியடித்து இதுபோன்றதொரு வாக்குறுதியைக் கொடுத்தார். அதிலிருந்தே செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகத்தைப் புரிந்துகொள்ளலாம்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

மக்களை ஒன்றுதிரட்டுவதாகட்டும், பிரச்சாரத்தில் ஜிகுனா வேலைகளைச் செய்வதாகட்டும் அனைத்திலும் செந்தில் பாலாஜியே முன்னிலை வகிக்கிறார். விஜயபாஸ்கரால் செந்தில் பாலாஜி அளவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதே கள எதார்த்தம். அதற்குக் காரணம் விஜயபாஸ்கருக்கு தனிப்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கிறது. அதனால் அவரலா இறங்கி வேலைசெய்ய முடியவில்லை. கரூரில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், செந்தில் பாலாஜி அதிமுகவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார். விஜயபாஸ்கர் மட்டும் தக்காளி தொக்கா என்று கேட்பது போல எடப்பாடியும் புகழ்ந்து தள்ளினார். விஜயபாஸ்கர் நல்ல பண்பாளர், தொகுதியில் எந்த ஊர் பற்றி கேட்டாலும் டான் டானு பதில் சொல்லக் கூடியவர் என்றார்.

முன்னாள் அமைச்சர் vs இந்நாள் அமைச்சர்… செந்தில் பாலாஜி எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சிம்ம சொப்பனமா?

கரூரில் வெற்றிபெறுவது இருவருக்கும் கௌரவ பிரச்சினையாகக் கருதுகிறார்கள். இதனால் போட்டியும் படு பயங்கரமாக இருக்கிறது. வந்துகொண்டிருக்கிற கருத்துக்கணிப்புகளில் செந்தில் பாலாஜியே முன்னிலை பெறுகிறார். கடந்த தேர்தலிலேயே விஜயபாஸ்கர் 400 சொச்சம் வாக்குகளில் தான் பார்டர் பாஸ் செய்தார் என்பதும் கவனித்தக்கது. சிம்ம சொப்பனமா, பண்பாளரா, முன்னாள் அமைச்சரா, இந்நாள் அமைச்சரா யார் வெற்றிவாகை சூடப் போவது மே 2ஆம் தேதி தெரியும். காத்திருங்கள்…