செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது!

 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்று போதிய மழை பெய்யாததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது, ஏரிக்கு தற்போது 347 கன அடி மட்டுமே நீர்வரத்து மட்டுமே உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 6 மணிக்கு 1086 கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 347 கன நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடி நீரில் தற்போது 2908 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீட்டமட்ட உயர்வான 24 அடியில் மாலை நிலவரப்படி 21.20 அடியாக உயர்ந்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது!

ஏரியின் மொத்த நீர்மட்டத்தை எட்ட இன்னும் 3 அடியே இருப்பதால், இன்று மாலைக்குள் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் என கூறப்பட்டது. இதனால் திருநீர் மலை, குன்றத்தூர், வழுதலம்பேடு, நத்தம் உள்ளிட்ட ஏரியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இப்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.