ஜூலை 1 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள்- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

 

ஜூலை 1 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள்- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 20 நாட்களாக அனைத்தும் செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் படிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன. அனைத்து பல்கலைக்கழக மற்றும் அதன் உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதற்கான இணைய தளங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே மாணவர்களின் செமெஸ்டர் தேர்வுகளும் நடைபெறுமா? நடைபெறாத என்ற குழப்பம் நிலவி வந்தது. இதற்கிடையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி,அன்பழகன் ஊரடங்கு முடிந்த பிறகு கல்லூரிகள் தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பின் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

ttn

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிர்வாகம் தேர்வுத்தேதியை அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.