“திமுகவினர் என்னை கேலி மட்டுமே செய்ய முடியும்” – தெர்மகோலால் நொந்துபோன செல்லூர் ராஜூ!

“திமுகவினர் என்னை கேலி மட்டுமே செய்ய முடியும்” – தெர்மகோலால் நொந்துபோன செல்லூர் ராஜூ!

வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்கும் முயற்சியாக 2019ஆம் ஆண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மகோலின் உதவியை நாடினார். இதற்காக தெர்மகோல்களை செல்லோடேப்பால் ஒட்டி அணையில் அவரே மிதக்க விட்டார். 10 சதுர கி.மீ அளவுள்ள வைகை அணைக்கு 300 தெர்மாகோல்களை அமைச்சர் விட்ட மாத்திரத்தில் வீசும் காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் தெர்மகோல்கள் கரை ஒதுங்கின. அன்றிலிருந்து தெர்மகோல் ராஜூ என்ற பெயர் நிலைநிறுத்தப்பட்டது.

“திமுகவினர் என்னை கேலி மட்டுமே செய்ய முடியும்” – தெர்மகோலால் நொந்துபோன செல்லூர் ராஜூ!

தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதை வைத்து செல்லூர் ராஜூவை தெர்மகோல் ராஜூ என நக்கல் தொனியில் விமர்சனம் செய்தனர். அதேபோல இவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள், தெர்மகோலுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் நொந்துபோன செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மேற்கில் போட்டியிடும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “மதுரைக்கு நான் கொண்டுவந்த திட்டங்களை திமுக தலைவர்களால் மறுக்க முடியாது. என்னுடைய துறையைப் பற்றி, என்னைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் யாரும் குறைசொல்ல முடியாது.

“திமுகவினர் என்னை கேலி மட்டுமே செய்ய முடியும்” – தெர்மகோலால் நொந்துபோன செல்லூர் ராஜூ!

அந்த அளவுக்குச் செயலால் நான் நிரூபித்திருக்கிறேன். திமுகவினர் என்னை கேலி, கிண்டல் பேசுவார்கள். அதுவும் நான் மதுரைக்குப் பாடுபட்டதற்காகத் தான் செய்வார்கள். தெர்மாகோல் திட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் சொல்லி நான் அதனைச் செயல்படுத்தினேன். ஆனால், தெர்மாகோல் ராஜூ என இன்று உலகம் பூராவும் பரவ வைத்துவிட்டார்கள். அது எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை” என்றார்.