அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒன்னும் தெரியாது – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

 

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒன்னும் தெரியாது – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

கூட்டுறவு துறையைப் பற்றி அமைச்சர் பெரியசாமிக்கு எதுவும் தெரியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அரசுக்கே தடுப்பூசி எப்போது வரும் என தெரியவில்லை. மாஸ்க் எப்படி போட வேண்டும் என முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அது எல்லாருக்கும் தெரியும். தடுப்பூசி வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சியில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் கொடுக்க சொன்ன ஸ்டாலின் இப்போது 5 லட்சம் நிவாரணம் அளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஒன்னும் தெரியாது – செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!

தொடர்ந்து பேசிய அவர், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறப்பு சான்றிதழில் முறையான காரணம் இடம் பெறாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதோடு, மதுரை அரசு மருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதே இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் அமைச்சர் பெரியசாமி குறித்து பேசிய அவர், கூட்டுறவு துறையை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. விருப்பம் இல்லாமல் தான் அவர் இந்த துறையில் இருப்பதாக தகவல். விவசாயக் கடன் தள்ளுபடியில் வெளிப்படைத் தன்மை உள்ளது. கூட்டுறவுத்துறையில் குறை இருப்பதை பெரியசாமி ஆதாரத்துடன் நிரூபித்தால் சட்டமன்றத்தில் நான் விவாதிக்க தயார் என்றும் கூறினார்.