ஆட்சிக்கு வந்தவுடன் திடீர் திடீரென அதிகாரிகள் இடமாற்றம்! செல்லூர் ராஜூ கண்டனம்

 

ஆட்சிக்கு வந்தவுடன் திடீர் திடீரென அதிகாரிகள் இடமாற்றம்! செல்லூர் ராஜூ கண்டனம்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் முன்னாள்அமைச்சர்,ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு, தேனி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கொரோனா தொற்றை குறைக்க தமிழக அரசு அதிக கவனம் எடுக்க வேண்டும், கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும், இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நோயாளிகளுக்கு சத்தானா உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

ஆட்சிக்கு வந்தவுடன் திடீர் திடீரென அதிகாரிகள் இடமாற்றம்! செல்லூர் ராஜூ கண்டனம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றானது தீ போல் பரவி வருகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வர் ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், துணை முதல்வராக இருந்தவர். ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரிகள் எல்லாம் திடீர் திடீரென்று மாற்றுகிறார்கள். கொரானா தடுப்பது குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே அவர்களை அப்படி பணி மாற்றம் செய்வது தவறு. சும்மா மத்திய அரசை குறை சொல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தொற்று பாதிப்பிலும் இறப்பிலும் வெளிப்படை தன்மைவெளிப்படைத் தன்மையோடு இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் இந்த அரசுக்கு வெளிப்படைத்தன்மை இல்லை ” எனக் கூறினார்.