“அதிமுகவிற்கு சசிகலாவின் வருகை தாக்கம்? திமுகவிற்கு அழகிரி வருகை தாக்கம்”

 

“அதிமுகவிற்கு சசிகலாவின் வருகை தாக்கம்? திமுகவிற்கு அழகிரி வருகை தாக்கம்”

சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள்,மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

“அதிமுகவிற்கு சசிகலாவின் வருகை தாக்கம்? திமுகவிற்கு அழகிரி வருகை தாக்கம்”

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வியூகம் பொதுக்குழுவில் அமைக்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அம்மா கிளினிக், பொங்கல் பரிசு ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஜனவரி மாதம் மழை பெய்துள்ளது. நல்ல ஆட்சியில்தான் நல்ல மழை பெய்யும். முன்பு பொதுக்குழுவில் ஜெயலலிதாவிற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்படும். இப்போது ஜெயலலிதா இடத்தில் இருபெரும் தலைவர்கள் உருவாகியுள்ளனர்.

சசிகாலாவின் வருகை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அழகிரியின் வருகை மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தான் கூறுகிறார்கள். அழகிரி எதிர்பார்த்த கூட்டம் 5000 பேர், ஆனால் வந்தது 15000 பேர். இவர்கள் எல்லாம் திமுகவின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள். அழகிரியின் வருகை கண்டிப்பாக திமுகவில் பாதிப்பை ஏற்படுத்தும்.