ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை? திமுக அரசின் திட்டம் இதுதான் – அமைச்சர் ஓபன் டாக்

 

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை? திமுக அரசின் திட்டம் இதுதான் – அமைச்சர் ஓபன் டாக்

மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று தமிழக சட்டப்பேரவை இன்று நடைபெற்றது.

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை? திமுக அரசின் திட்டம் இதுதான் – அமைச்சர் ஓபன் டாக்

விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் வெளியிலிருந்து 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு எரிசக்தி கழகம் மூலமாகவே 2 ரூபாய் 61 பைசாவுக்கு வாங்க திமுக அரசு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்கள் மூலமாகவே மின் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக வைத்து ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்காக ஒரு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என்றும் அவர் விளக்கமளித்தார்.