சொத்து மதிப்பை குறைத்துக் காட்ட ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

 

சொத்து மதிப்பை குறைத்துக் காட்ட ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

சேலம்

சேலத்தில் நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்துக் காட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(24). இவர் திருச்செங்கோடு வடகுராம்பட்டி கிராமத்தில் வாங்கிய 1.18 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய, சேலம் தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

சொத்து மதிப்பை குறைத்துக் காட்ட ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் கைது

இந்த நிலையில் அதே அலுவலகத்தில் பணிபுரியும், முத்திரை கட்டண பிரிவு துணை வட்டாட்சியர் ஜீவானந்தம் (41) என்பவர், நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்து காட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு விருப்பம் இல்லாத நிஷாந்த், இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் சேலம் காந்திரோடு பகுதியில் பணத்தை வழங்குவதாக நிஷாந்த் தெரிவித்தார். அதன்படி அங்கு சென்று லஞ்ச பணத்தை பெற்றபோது ஜீவானந்தத்தை, ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைதுசெய்தனர்.