“ஐயா ஸ்டாலினுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்” – லேட்டா சொன்னாலும் நச்சுனு சொன்ன சீமான்!

 

“ஐயா ஸ்டாலினுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்” – லேட்டா சொன்னாலும் நச்சுனு சொன்ன சீமான்!

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர போராடிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு வழியாக அமர்த்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்கிறார் ஸ்டாலின்.

“ஐயா ஸ்டாலினுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்” – லேட்டா சொன்னாலும் நச்சுனு சொன்ன சீமான்!

மே 7ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அன்றைய நாள் காலை 9 மணிக்குப் பதவியேற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார். முதல் முறையாக முதலமைச்சராகப் போகும் ஸ்டாலினுக்கு உலக நாடுகளிலிருந்து தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பிரபலங்களும் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து இன்றோடு மூன்று நாட்களாகியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சர் வேட்பாளருமான சீமானிடமிருந்து வாழ்த்து வரவே இல்லை. இச்சூழலில் இன்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.