ஸ்டாலின் ஓட்டுக்காக வேல் ஏந்தியிருக்கிறார்- சீமான்

 

ஸ்டாலின் ஓட்டுக்காக வேல் ஏந்தியிருக்கிறார்- சீமான்

நான் உளப்பூர்வமாக வேல் ஏந்தினேன் என்றும் ஸ்டாலின் ஓட்டுக்காக ஏந்தியிருக்கிறார் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய, “வேளாண் சட்டம் ஆபத்தான சட்டம். பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே பாதிப்பை ஏற்படுத்தும். உணர்வு மிக்க விவசாயிகளே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். விவசாயிகள் கண்ணியமாக போராடும் போதே அழைத்துப் பேசாத அரசு இப்போது விவசாயிகள் மீது குற்றம்சாட்டுகிறது. மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

ஸ்டாலின் ஓட்டுக்காக வேல் ஏந்தியிருக்கிறார்- சீமான்

நான் உளப்பூர்வமாக வேல் ஏந்தினேன் ஆனால் ஸ்டாலின் ஓட்டுக்காக வேல் ஏந்தியிருக்கிறார். யார் வேலை கையிலெடுத்தாலும் என் முகம்தான் ஞாபகம் வரும். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தீர்க்காத குறைகளை 100 நாட்களில் தீர்த்து விடுவாரா ஸ்டாலின்? 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிறையை திறந்து விடுவிப்போம். ராகுல்காந்தி நடிக்க ஆசைப்பட்டுதான் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார்” எனக் கூறினார்.