சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

 

சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

சசிகலா சிறையிலிருந்து வந்த பிறகு யாரையும் சந்திக்காமலேயே இருந்துவந்தார். அவ்வப்போது டிடிவி தினகரன் மட்டுமே சந்தித்துக் கொண்டிருந்தார். இச்சூழலில் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியில் தலைகாட்டிய சசிகலா, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் அம்மா ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று இணைப்புக்காக அழைப்பு விடுத்தார்.

சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

இந்த அறிவிப்பு வெளியான உடன் இயக்குநர் பாரதிராஜா, சரத்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதில் சீமானும் ஒருவர். மற்றவர்களைத் தவிர்த்து சீமான் சந்திப்பு தான் பெரிதாகப் பேசப்பட்டது. சீமான் எப்போதும் யாருடனும் கூட்டணி இல்லை; முக்கியமாக கழகங்களுடன் கூட்டணி கிடையாது என்ற அடிக்கடி உணர்த்தி அதன்படி செயல்படுபவர். அவரே சசிகலாவைச் சந்தித்தது தான் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

அதன்பிறகு சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். இருப்பினும் சசிகலாவுடன் சீமான் என்ன பேசியிருப்பார் என்ற பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டுவந்தன. அந்த யூகங்களுக்குத் தற்போது சீமான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த சீமான், சசிகலாவுடன் நடந்த உரையாடல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

அப்போது பேசிய அவர், “சசிகலா சிறையிலிருந்து திரும்பியதும் நான் அவரை நேரில் சந்தித்தேன். அவர் என்னையும் என் மனைவியையும் பார்க்க விரும்பினார். அவரின் அழைப்பிலேயே நான் சந்தித்தேன். அந்தச் சந்திப்பில் தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்து அரசியலும் பேசப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் அதிமுகவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா உளமாற விரும்பினார்.

சசிகலாவின் ‘சமாதான பறவை’ சீமான்… எடப்பாடிக்கு அனுப்பிய தூது என்ன?

அதிமுகவும் அமமுகவும் இணைவதற்கு நான் சமாதானம் பேச வேண்டும் என அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நான் நன்றாகப் பேசுவேன். நான் பேசிப் பார்க்கிறேன் என சொன்னேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. அதேவேளையில் அவர் நானும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று அழுத்தவில்லை. ஏனெனில், நான் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று அவருக்குத் தெரியும்” என்றார்.