நான் பாஜகவின் B டீம்? முருகனை சிக்ஸ் பேக் உடன் வரைவேன் – சீமான்

 

நான் பாஜகவின் B டீம்? முருகனை சிக்ஸ் பேக் உடன் வரைவேன் – சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை மண்ணடி தம்புசெட்டித் தெருவில் நடைபெற்று வரும் முத்துக்குமாரின் நினைவேந்தல் பொது கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய சீமான், “தமிழர்கள் இனப்பற்று கொள்ள கூடாது, ஆனால் இனவெறியை கொண்டு இருக்க வேண்டும். அச்சம், பயம், அடிபணிவது எங்கள் பாரம்பரையிலே கிடையாது. இஸ்லாமிய சங்கங்கள், இஸ்லாமிய மக்கள், ஏன் காகித மில்லத்தை பற்றி பேச பயப்படுகிறார்கள். ஸ்டாலினுக்கு காகித மில்லத் பற்றி என்ன தெரியும்? என்னிடம் வந்து 5 நிமிடம் பேச சொல்லுங்கள், அவருக்கு பேச தெரியாது. இந்த நாட்டின் ஆக சிறந்த சிறுபான்மையினர் ஜெயலலிதா, கருணாநிதி தான். இந்த தேசம் யார் உடையது? அதை பற்றி முதலில் விவாதிப்போம். முதலில் உளவியல் விடுதலை அடைய வேண்டும், நாம் சிறுபான்மை இல்லை, பெரும்பான்மை மக்கள் என்பதை உணர வேண்டும். மதம் மாறி கொள்ளும், மொழி, இனம் மாறாது.

நான் பாஜகவின் B டீம்? முருகனை சிக்ஸ் பேக் உடன் வரைவேன் – சீமான்

முருகனுக்கு சிக்ஸ் பேக் போட்டு கூட ஒவியம் வரைவேன், அந்த அளவுக்கு முருகன் எப்படி இருப்பார் என எனக்கு தெரியும். சிறுபான்மை என்பது சலுகை அல்ல அது நமது உரிமை. நாடு சுதந்திரம் பெற்ற போது தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்து இருக்க வேண்டும். பாஜகவின் பி டீம் என்று என்னை கூறுகிறார்கள். பாஜக – காங்கிரஸ் இரண்டுமே எனக்கு எதிரி தான். என் நிலத்திற்கு இந்திய கட்சி தேவை இல்லை. மாநிலத்தை ஆள மாநில கட்சி போதும். எந்த காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஈழத்தில் தமிழ் மக்கள் கொன்று குவிக்க உதவிய தேசம் இந்திய தேசம் மறக்க முடியுமா?. இந்த தேர்தலில் அனைவரையும் வீழ்த்துவோம். காங்கிரஸ் எனது இனத்தின் எதிரி , பாஜக மானுடத்தின் எதிரி. நான் ஓட்டுக்கானவன் அல்ல நாட்டுக்கானவன். தமிழகத்தில் இருக்கும் ஒரே மாநில கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

திமுகவால் காசு கொடுக்கால் ஒரு கூட்டத்தை கூட்ட முடியுமா ? கிராம சபை கூட்டத்தை கூட காசு கொடுத்து தான் கூட்டினார். ஒன்றுமே இல்லாத பாஜகவை கூட்டமாக கூட்டியது திமுக தான், என்னை பாஜகவின் பி டிம் என சொல்கிறீர்கள், ஆனால் திமுக தான் மெயின் டிம், பாஜக – காங்கிரஸ்- திமுக மூன்று கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நீங்கள் என்னை நம்பினாலும், நம்பவில்லை என்றாலும், என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை” எனக் கூறினார்.