சசிகலா உடன் சீமான் சந்திப்பு!

 

சசிகலா உடன் சீமான் சந்திப்பு!

இந்நிலையில் சசிகலாவுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாரதிராஜா சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.

சசிகலா உடன் சீமான் சந்திப்பு!

ஜெயலலிதா பிறந்தநாளான இன்று சென்னையில் உள்ள திநகர் இல்லத்தில் சசிகலா ஜெ. திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், “ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே நம் இலக்கு. நம்முடைய உடன்பிறப்புக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் . அதை செய்வீர்கள் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது.ஏனென்றால் நீங்கள் புரட்சித்தலைவியின் உண்மை தொண்டர்கள்.நிச்சயமாக நீங்கள் இது செய்வீர்கள் நான் உங்களுக்கு துணை இருப்பேன்.நான் விரைவில் தொண்டர்களையும் ,பொதுமக்களையும் சந்திக்க வருவேன்” என்றார்

சசிகலா உடன் சீமான் சந்திப்பு!

இந்நிலையில் சென்னையில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார்.அவருடன் இயக்குநர் பாரதிராஜாவும் உடன் வந்துள்ளார். முன்னதாக சசிகலாவை சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் சந்தித்து விட்டு சென்றனர். அவர்கள் சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது.