ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன்… நிர்பயா வழக்கின் வக்கீல் உறுதி

 

ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன்… நிர்பயா வழக்கின் வக்கீல் உறுதி

ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன் என நிர்பயா வழக்கை நடத்திய வக்கீல் சீமா குஷ்வாஹா தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸில் கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. ஹத்ராஸில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி, பிரியங்காந்தி என பல காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செல்ல முயன்றனர்.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன்… நிர்பயா வழக்கின் வக்கீல் உறுதி
வக்கீல் சீமா குஷ்வாஹா

ஆனால் அவர்களை வரும் பாதையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சூழ்நிலையில், 2012ல் நடந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடிய வக்கீல் சீமா குஷ்வாஹா ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்றார். ஆனால் அவரையும் உத்தர பிரதேச நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை.

ஹத்ராஸ் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்காமல் போக மாட்டேன்… நிர்பயா வழக்கின் வக்கீல் உறுதி
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

இது தொடர்பாக வக்கீல் சீமா குஷ்வாஹா கூறுகையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் என்னை ஹத்ராஸூக்கு வரச் சொன்னார்கள், ஏனெனில் தங்களது சட்ட ஆலோசகராக நான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். போலீஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நிர்வாகம் கூறுவதால் நான் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நான் இங்கே தனியாக வந்துள்ளேன், நான் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை எப்படி ஏற்படுத்த முடியும். அந்த குடும்பத்தினரை சந்திக்காமல் இங்கிருந்து செல்ல மாட்டேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நான் சந்திப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இதனால் நிர்வாகம மக்களுக்கு உதவுகிறது என்று நம்பலாம். நான் ஒரு தனியார் சட்ட ஆலோசகராக, நான் என் உதவியை வழங்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.