20 எம்.எல்.ஏக்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

 

20 எம்.எல்.ஏக்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் அதிரடியாக களமிறங்கிய திமுக தொகுதி ஒதுக்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்த நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தது. கூட்டணி கட்சிகளிடையே குழப்பம், தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட காரணங்களால் வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமானதாக காரணம் சொல்லப் பட்டாலும், அதிமுகவுக்கு எதிரான திமுகவின் வியூகமாகவே இது பார்க்கப்பட்டது.

20 எம்.எல்.ஏக்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

பல நாட்களாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட சொல்லாமல் காக்கப்பட்ட சஸ்பென்ஸ் இன்று வெளியானது. அதிமுக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் தொகுதிகளில் டஃப் கொடுக்கும் அளவுக்கு வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது திமுக. அதே போல, திமுகவின் வாரிசு அரசியல் பற்றி சொல்லவா வேண்டும். பல தொகுதிகளில் திமுக மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

20 எம்.எல்.ஏக்களுக்கு ‘நோ’ சொன்ன ஸ்டாலின்!

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் 20 பேருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாமென ஸ்டாலினே சொல்லி விட்டாராம். திமுக வேட்பாளர் பட்டியலின் படி, மொத்தமாக 78 எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல, 12 பெண்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்களில் 9 பேர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.