ஸ்டாலினை எதிர்த்து நிற்க துணிவில்லையா? திருவொற்றியூரில் சீமான் போட்டி

 

ஸ்டாலினை எதிர்த்து நிற்க துணிவில்லையா? திருவொற்றியூரில் சீமான் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்து செய்துள்ளது. 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், முதலில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் களம்கண்டார்.

ஸ்டாலினை எதிர்த்து நிற்க துணிவில்லையா? திருவொற்றியூரில் சீமான் போட்டி

இதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கினார். இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வரும் 7 ஆம் தேதி மாலை 03 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளது

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என சீமான் கூறியிருந்தார். இந்த தேர்தலில் தமிழரா? திராவிடரா? என ஒரு கை பார்த்துடுவோம் என சீமான் சவால் விட்டிருந்தார். இதனால் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக கூறியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது திருவொற்றியூரில் போட்டியிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவொற்றியூர் தொகுதியில் நாடார்கள், மீனவர்கள், முதலியார் ஜாதியினர் உள்ளனர். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.