ஈரோட்டில் நேர கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

 

ஈரோட்டில் நேர கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.

ஈரோடு மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 9ஆம் தேதி முதல் நேர கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, பால், மருந்தகங்கள், ஓட்டல்கள் தவிர பிற கடைகள் மாலை 5 மணிக்கு மேல் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நேரக் கட்டுப்பாட்டினை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஈரோட்டில் நேர கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைப்பு!

இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 4 கடைகள் கூடுதல் நேரம் செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

இதனை அடுத்து, 4 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் என ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரிகள், அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல், முக கவம் முறையாக அணியாத 150 பேருக்கு தலா ரூ.200 என ரூ.30 அபராதம் விதிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.