ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து -இளைஞர் தப்பி ஓட்டம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து -இளைஞர் தப்பி ஓட்டம்!

ஈரோடு மொசிகீரனார் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (46). ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கருவேப்பிலை கடை வைத்து வியாபாரம் வருகிறார்.
இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார்.மேலும் ரங்கசாமியின் தாய் கவிதா இவர்களுடன் வசித்து வருகிறார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து -இளைஞர் தப்பி ஓட்டம்!

இந்த நிலையில் ரங்கசாமி கடை அருகே அவரது உறவினர் கடை வைத்திருந்தார். இவர்களுக்கு இடையே தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் தற்போது ஈரோடு வ. உ. சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது.

அங்கு , ரங்கசாமிக்கு தனிக் கடையும், அவரது உறவினருக்கு தனி கடையும் ஒதுக்கப்பட்டுள்ளது. உறவினரின் மகன் தமிழ்வாணன் (23) என்பவர் கடையை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வீட்டிற்க்கு சென்ற தமிழ்வாணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் காவேரி, கவிதா மற்றும் அவரது மகள் ஆகியோரைக் குத்தி உள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து -இளைஞர் தப்பி ஓட்டம்!

தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த ரங்கசாமிக்கும் கையில் குத்து விழுந்துள்ளது. அடிபட்டவர்கள் அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். தமிழ்வாணன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து -இளைஞர் தப்பி ஓட்டம்!