மோடிக்கு முன்பே முன்னாள் முதல்வர் கமல்நாத் வல்ல பவனில் பொது மக்களுக்கு தடை விதித்தார்.. சிந்தியா தாக்கு..

மோடிக்கு முன்பே முன்னாள் முதல்வர் கமல்நாத் வல்ல பவனில் பொது மக்களுக்கு தடை விதித்தார்.. சிந்தியா தாக்கு..

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. குவாலியரில் நேற்று பா.ஜ.க. உறுப்பினர் வரவேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பா.ஜ.க. எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது: கமல் நாத் ஜி ஒரு விஷயத்தில் மோடிக்கு முன்னால் உள்ளார். கோவிட்-19 காலத்தில் மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மோடிஜி லாக்டவுனை விதித்தார்.

மோடிக்கு முன்பே முன்னாள் முதல்வர் கமல்நாத் வல்ல பவனில் பொது மக்களுக்கு தடை விதித்தார்.. சிந்தியா தாக்கு..
ஜோதிராதித்ய சிந்தியா

ஆனால் மோடி ஜி லாக்டவுனை விதிப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்பே, கமல் நாத் ஜி வல்லப் பவனை லாக்டவுன் நிலையில் பொது மக்களுக்கு வைத்திருந்தார். காங்கிரஸ் ஆட்சி வந்த போது, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். நேர்மையான அரசு ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காங்கிரஸ் மத்திய பிரதேசம் முழுவதும் ஊழலை பரப்பியது.

மோடிக்கு முன்பே முன்னாள் முதல்வர் கமல்நாத் வல்ல பவனில் பொது மக்களுக்கு தடை விதித்தார்.. சிந்தியா தாக்கு..
வல்லப் பவன்

வல்லப் பவனின் உள்ளே பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போது எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை. ஆனால் அவர்களை பொறுத்தவரை ஊழல் மட்டுமே மரியாதை. இந்த சூழ்நிலையை கண்டேன், பொதுமக்களுக்காக குல் எழுப்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். வல்லப் பவன் என்பது மத்திய பிரதேசத்தின் தலைமை செயலகம்.