2022 செப்டம்பர் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்

2022 செப்டம்பர் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்

2022 செப்டம்பர் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படலாம் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2008ல் சந்திரயான் 1 விண்கலம் வெற்றி பெற்றது. இதனையடுத்து 2019ல் அனுப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் முழு வெற்றியை பெறவில்லை. தற்போது சந்திராயன் 3 விண்கல பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக சந்திராயன் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

2022 செப்டம்பர் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்
ஜிதேந்திர சிங்

இந்த சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் சந்திரயான்-3 விண்கல பணிகள் குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு நாடாளுமன்ற மக்களவையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரும், அணுசக்தி, விண்வெளி துறை இணையமைச்சருமான ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காரணமாக சந்திரயான்-3 பணிகளில் சிறு தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் வீட்டிலிருந்து செய்ய முடிந்த பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.

2022 செப்டம்பர் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு.. மத்திய அமைச்சர் தகவல்
நிலவு

லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு சந்திரயான்-3 பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. கணினி செயல்திறன், விண்கல விரிவான சோதனை உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போதைய இயல்பு நிலையில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டால் 2022 செப்டம்பர் காலாண்டில் சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.