தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு?!

 

தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு?!

கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவ மாணவிகளுக்கு 11ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அனுமதிக்கப்படும் இடங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பாடப்பிரிவு அவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றும் , ஒரு பாடப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர விரும்பினால் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு?!

மிக அதிகப்படியான மாணவர்கள் ஒரு பிரிவில் சேர விருப்பம் தெரிவித்தால் முந்தைய பாடத்தில் இருந்து 50 மதிப்பெண்களுக்கு கொள்குறி தேர்வு நடத்தி அதற்கு ஏற்ப மாணவர்களுக்கு அந்த பிரிவுகளில் கொடுக்கலாம் என்றும் ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் படி பாடங்களை நடத்தலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு?!

ஆனால் ஜூன் மூன்றாவது வாரத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு நேரடியாக வகுப்புகள் தொடங்குமா? ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுமா? என்பது குறித்து இந்த சுற்றறிக்கை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அதே போல் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருப்பதாக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.