கேரளாவில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

கேரளாவில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவும் மாநிலமாக கேரளா உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் அங்கு சராசரியாக சுமார் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து அதே நிலை நீட்டித்து கொரோனாவின் கோரப்பிடியில் கேரளா சிக்கியது. இதையடுத்து, அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வார இறுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் விளைவாக தற்போது கேரளாவில் பாதிப்பு 19 ஆயிரமாக குறைந்துள்ளது.

கேரளாவில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறப்பு; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பரிசீலனை செய்தார். திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில் கொரோனா மறு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவெடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 1ம் தேதி 1 முதல் 7ஆம் வகுப்புகளுக்கும் 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. 9 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 18ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளையும் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இடைவெளி விட்டு வகுப்புகளில் அமர்வதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து பள்ளிக்கு வர வேண்டுமென்றும் விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.