தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும்! – அரசு உத்தரவால் பெற்றோர், ஆசிரியர் அதிர்ச்சி

 

தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும்! – அரசு உத்தரவால் பெற்றோர், ஆசிரியர் அதிர்ச்சி

10ம் வகுப்பு தேர்வுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும்! – அரசு உத்தரவால் பெற்றோர், ஆசிரியர் அதிர்ச்சி10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவர்களின் நலன் காக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கூறி வந்தார். தற்போது, தெர்மல் ஸ்கேனரைக்கூட அரசு வழங்காது, அதை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ, வேறு நிதியில் இருந்தே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு நடைபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நடைபெற உள்ள ஜூன் 2020ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக அனைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை வசதி போதுமானதாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். கூடுதலாக தேவைப்படின் அருகில் உள்ள நடுநிலை, தொடக்கப் பள்ளிகளிலிருந்து உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனைக் கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் நிதியிலிருந்தோ அல்லது பல்வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பயன்படுத்தப் பள்ளிகளில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதை போல் ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரியும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கிக்கொள்ள வேண்டும்! – அரசு உத்தரவால் பெற்றோர், ஆசிரியர் அதிர்ச்சி

எல்லா பள்ளிகளிலும் நிதி இருக்குமா என்பது சந்தேகமே… மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஒட்டுமொத்தமாக தெர்மல் ஸ்கேனர் வாங்க ஆர்டர் கொடுத்தால் கூட தேர்வு நடைபெறுவதற்கு முன்பு கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் அரசு தேவையான கருவிகளை வாங்கிக்கொடுத்தால் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.