“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!

“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. முழு கல்வியாண்டும் ஆன்லைன் வகுப்பு மூலமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தொற்று அதிகமானதால் மீண்டும் மூடப்பட்டன.

“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!

இதனை தொடர்ந்து இரண்டாவது அலை வேறு வந்துவிட்டதால் பள்ளி, கல்லூரிகள் திறக்க சாத்தியமில்லாமல் போனது. ‌தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டது. ஊரடங்கு பிறப்பித்த மாநிலங்கள் படிபடியாக தளர்வுகள் அறிவித்து வருகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் நிபுணர்களின் கருத்து இன்றியமையாததாக மாறிவிட்டது.

“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!

நேற்று இதுதொடர்பாகப் பேசிய டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, குறைவான பரவல் உள்ள மாவட்டங்களில் படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்றார். 5 சதவீதத்துக்கும் குறைவான பாசிட்டிவ் ரேட் கொண்ட இடங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிடலாம் என்றும் சொல்லியிருந்தார். தற்போது பள்ளிகளை எத்தனையாவது வகுப்பு மாணவர்களுக்கு திறக்கலாம் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பல்ராம் பார்கவா விளக்கியுள்ளார்.

“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!
ரன்தீப் குலேரியா

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கொரோனா தொற்றை எதிர்கொள்வதில் பெரியவர்களை விட குழந்தைகள் நல்ல எதிர்ப்பாற்றலை பெற்றிருக்கின்றனர். கொரோனா பரவலை அதிகப்படுத்தும் மனித செல்களிலுள்ள என்ஸைம்கள் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளன. இதன் காரணமாக அவர்கள் அவ்வளவு எளிதில் கொரோனாவால் பாதிக்கப்பட மாட்டார்கள். இதனால் தான் ஐரோப்பிய நாடுகளில் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் அலைகளில், அவர்கள் தொடக்கப் பள்ளிகளை மூடவே இல்லை.

“பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது” – ஐசிஎம்ஆர் தலைவரின் அற்புதமான ஐடியா!
பல்ராம் பார்கவா

அதனால் இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே சிறந்ததொரு முடிவாக இருக்கும். அதேசமயம் தொடக்கப் பள்ளி மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்யவேண்டும்” என்றார்.