ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்கலாமா? மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு!

 

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்கலாமா? மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு!

கொரானா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதே போல, பள்ளி கல்லூரிகளும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்து ஊரடங்கை நீடிக்க அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து விட்டது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பள்ளிகளை திறக்கலாமா? மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு!

பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் தான் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 15 ஆம் தேதி மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் காணொளி வாயிலாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது அந்தந்த மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த நிலைபாடுகள் கேட்டறியப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் பள்ளிகளை திறக்கலாமா என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு வரும் 20 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.