தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!

 

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி, கல்லூரி செல்லத் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது படிப்படியாக கொரோனா குறைந்து வரும் நிலையில 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை முதலாமாண்டு மாணவர்கள் தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!

பள்ளி , கல்லூரிகளில் மாணவர்கள் 50% பேருடன் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணியாவிட்டால் பள்ளி சார்பில் முகக்கவசம் அணிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு!

காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகுப்புகள் மாலை 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள் , பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.