பள்ளிகள் திறப்பு- பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு!

 

பள்ளிகள் திறப்பு- பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் நடைபெற உள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு- பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு!

இந்நிலையில் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க அரசு முடிவு செய்துள்ளது. பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.