தற்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை? – அமைச்சர் அன்பில் மகேஷ்

 

தற்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகள் திறப்பு இல்லை? – அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவது கட்டாயம் இல்லை என்று அறிவித்த பள்ளிக்கல்வித்துறை , கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறது.

தற்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகள் திறப்பு இல்லை? – அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த சூழலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இது குறித்து ஏற்கனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அத்துடன் இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

இதைத்தொடர்ந்து மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை ,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பாதிப்பு சூழல் முடிந்து பள்ளிகள் முழு அளவில் செயல்பட தொடங்கியதும் மன அழுத்தத்தை போக்க மாணவர்கள் , பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தற்போதைக்கு 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகள் திறப்பு இல்லை? – அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் திறப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளை திறக்க தனியார் பள்ளிகள் கேட்டு வருகின்றனர். பெற்றோர் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருப்பதால் பள்ளி திறப்பு பற்றி முடிவு செய்யவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதை பொறுத்தே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்” என்றார்.