ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே பள்ளி,கல்லூரிகள் திறக்க முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே பள்ளி,கல்லூரிகள் திறக்க முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பால் திறக்கப்படாத நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகே பள்ளி,கல்லூரிகள் திறக்க முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் தான் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தேர்வுகளை நடத்தி முடிப்பது தான் தற்போது முதற்கட்ட பணி என்றும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் எவ்வாறு பள்ளிகளை நடத்துவது என்பது பற்றிய ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.