ஜூன் 15 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… துணிந்து முடிவு எடுத்த சிக்கிம் அரசு….

ஜூன் 15 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… துணிந்து முடிவு எடுத்த சிக்கிம் அரசு….

தொற்று நோயான கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அதேசமயம் வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், அசாம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியவற்றில் அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில் கடந்த 3 மாத காலத்தில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

ஜூன் 15 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… துணிந்து முடிவு எடுத்த சிக்கிம் அரசு….

இருப்பினும், லாக்டவுன் விதிமுறைகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை சிக்கிமில் அம்மாநில அரசு செயல்படுத்துகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் 15ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கே.என். லெப்சா கூறியதாவது: நாங்கள் 9 முதல் 12ம் வகுப்பு வரை தொடங்க உள்ளோம்.

ஜூன் 15 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு… துணிந்து முடிவு எடுத்த சிக்கிம் அரசு….

அதேசமயம், நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் வகுப்புகள் நடக்காது. சமூக விலகலை உறுதி செய்ய பள்ளிகளில் காலை கூட்டம் நடத்த அனுமதி கிடையாது. வகுப்புகள் மீண்டும் திறக்கும்போது சமூக விலகலை உறுதி செய்வது அவசியம் என தெரிவித்தார். சிக்கிமில் ஒருவர் கூட கொரோனா வைரஸ் பாதிக்கப்படாத நிலையிலும் அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திறப்பதில் அதிக முன்எச்சரிக்கையுடன் செயல்படுதவது குறிப்பிடத்தக்கது.