தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

 

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வரும் 14 ஆம் தேதி முதல் பளிக்கு வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

கொரோனா இரண்டாம் அலை பரவலால் சுமார் ஒரு மாதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் அனைத்து ஆசிரியர்களும் வீட்டிலிருந்தபடியே பணியாற்றிவருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 14 முதல் தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும். சான்றிதழ் விநியோகம், மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கை, கற்றல் – கற்பித்தல் பணி, விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளிக்கு வரவேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.