9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

 

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டும் ஆல் பாஸ் அறிவிப்பு வந்திருக்கிறது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பாடத்திட்டங்களை 40% குறைத்து, படாதபாடு பட்டு ஆன்லைன் கிளாஸ் எடுத்த ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்தாலும் மாணவர்களுக்கு உற்சாகத்தையே கொடுத்துள்ளது.

9,10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வரவேண்டாம்- பள்ளி கல்வித்துறை

இந்நிலையில் 9,10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வே இல்லாமல் தேர்ச்சியடைந்த மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும் ஜூன் அல்லது ஜூலை மாதம் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.