ப்ளேடை எடுத்தார் -பிரசவம் பார்த்தார் -எட்டாவது படித்தவர் செஞ்ச வேலையால் நடந்த சோகம்.

ப்ளேடை எடுத்தார் -பிரசவம் பார்த்தார் -எட்டாவது படித்தவர் செஞ்ச வேலையால் நடந்த சோகம்.

எட்டாம் வகுப்பு படித்த ஒருவர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் இறந்த சோகம் நடந்துள்ளது .

ப்ளேடை எடுத்தார் -பிரசவம் பார்த்தார் -எட்டாவது படித்தவர் செஞ்ச வேலையால் நடந்த சோகம்.

உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் சைனி கிராமத்தில் மா ஷர்தா மருத்துவமனையின் உரிமையாளர் ராஜேஷ் சாஹ்னி ஒரு பிரசவ ஹாஸ்ப்பிட்டல் நடத்தினார் .அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய 8 வது வரை படித்த 30 வயது ராஜேந்திர சுக்லா என்பவரை சாஹ்னி நியமித்தார் .

இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் ராஜாராம் என்பவர் தனது 33 வயது மனைவி பூனத்தை பிரசவத்திற்காக அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு கூட்டி வந்தார் . அப்போது கடந்த புதன் கிழமை அந்த பெண்ணுக்கு எட்டாவது படித்த சுக்லா ஒரு ரேசர் ப்ளேடு மூலம் சிசேரியன் செய்தார் .உடனே அந்த பெண்ணுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது .இதில் அப்போது பிறந்த குழந்தை இறந்துவிட்டது .பிறகு அதிக ரத்தப்போக்கால் அந்த தாயும் இறந்து விட்டார் .
இதனால் அந்த பெண்ணின் கணவர் ராஜாராம் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மருத்துவமனையில் சோதனை நடத்தினர் .அப்போது அந்த சிசேரியன் செய்த சுக்லா, எட்டாவது வரை படித்து விட்டு இந்த தவறான ஆப்பேரேஷன் செய்ததால் இருவரின் உயிர் போனதை போலீசார் கண்டுபிடித்தார்கள் .இந்த சட்டவிரோத கிளினிக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சுல்தான்பூர் குவாக்போலிஸ் இப்போது சுல்தான்பூர் சி.எம்.ஓவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

ப்ளேடை எடுத்தார் -பிரசவம் பார்த்தார் -எட்டாவது படித்தவர் செஞ்ச வேலையால் நடந்த சோகம்.