வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

 

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள் வரை தவணை செலுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கி விலக்கு அளித்தது. தற்போது, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தொழில் நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளது.

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி வரும் மார்ச் 31 வரை வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைத்துள்ளது என்ற தகவலை அறிக்கை மூலமாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. அதோடு வீட்டுக் கடன் மீதான புராஸஸிங் கட்டணத்திற்கு 100 சதவிகித விலக்கு கொடுப்பதாக தெரிவித்துள்ளது எஸ்பிஐ. முன்னதாக வீட்டுக்கடன், தொழிற்கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கியவர்கள் கடன்களை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம் என எஸ்பிஐ அறிவித்திருந்தது குறிப்பிட தக்கது.