அள்ளி கொட்டிய வட்டி வருவாய்… ரூ.4,189.34 கோடி லாபம் ஈட்டிய பாரத ஸ்டேட் வங்கி..

அள்ளி கொட்டிய வட்டி வருவாய்… ரூ.4,189.34 கோடி லாபம் ஈட்டிய பாரத ஸ்டேட் வங்கி..

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் எஸ்.பி.ஐ. தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.4,189.34 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 81.2 சதவீதம் அதிகமாகும். எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 2.1 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ.1,539.73 கோடி பாரத ஸ்டேட் வங்கி திரட்டியது, இது லாபம் அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

அள்ளி கொட்டிய வட்டி வருவாய்… ரூ.4,189.34 கோடி லாபம் ஈட்டிய பாரத ஸ்டேட் வங்கி..

கடந்த ஜூன் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கிக்கு, வட்டி வரவுக்கும், வட்டி செலவினத்துக்கும் இடையிலான வித்தியாசமான நிகர வட்டி வருவாய் அதிகரித்துள்ளது. அந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி வருவாய் 16.1 சதவீதம் அதிகரித்து ரூ.26,641.56 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்த வங்கியின் வட்டி வருவாய் ரூ.22,938.8 கோடியாக இருந்தது.

அள்ளி கொட்டிய வட்டி வருவாய்… ரூ.4,189.34 கோடி லாபம் ஈட்டிய பாரத ஸ்டேட் வங்கி..

கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி வட்டி அல்லாத வருவாயாக ரூ.7,957.48 கோடி ஈட்டியுள்ளது. 2020 ஜூன் இறுதி நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாராக் கடன் 5.44 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.86 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 9 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.