பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு… வட்டி வருவாய் மட்டும் ரூ.28,182 கோடி

பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு… வட்டி வருவாய் மட்டும் ரூ.28,182 கோடி

பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 51.9 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி லாபமாக ரூ.3,012 கோடி ஈட்டியிருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு… வட்டி வருவாய் மட்டும் ரூ.28,182 கோடி
பாரத ஸ்டேட் வங்கி

2020 செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.28,181.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.6 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி லாபவரம்பு 3.34 சதவீதமாக இருந்தது.

பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு… வட்டி வருவாய் மட்டும் ரூ.28,182 கோடி
பாரத ஸ்டேட் வங்கி

கடந்த செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாராக்கடன் 5.88 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.08 சதவீதமாகவும் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 1.12 சதவீதம் உயர்ந்து ரூ.207.05ஆக அதிகரித்தது.